×

இந்த அரசுக்கு கொரோனா ஒரு சாக்கு: சீனிவாசன், சமூக ஆர்வலர், நந்தியம்பாக்கம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 55 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கியமான நாட்களில் ஊராட்சிகளில் கிராம சபை என்ற பெயரில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் பொது மக்களுக்கு முன்கூட்டியே துண்டு பிரசுரம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு நடத்தப்படும். கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்துக்கு தமிழக அரசு கொரோனா தொற்று காரணம் காட்டி தடை விதித்தது.

ஆனால், அதே நேரத்தில் திரையரங்குகளுக்கு 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்கிறது. தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழாவில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போதெல்லாம் கொரோனா தொற்று ஏற்படவில்லையா என்பதை அரசு கூற வேண்டும். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அதிமுகவினர் கூட்டம் நடத்துவது நிகழ்ச்சி நடத்துகின்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். அப்போது கொரோனா தொற்று ஏற்படவில்லையா என்பதை தமிழக அரசு கூற வேண்டும். அதிமுக அரசு சுயநலத்துடன் செயல்படுகின்றனர். இந்த ஆட்சியை நாம் விரட்டி அடித்து மக்கள் கடமையாற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசை ஆட்சியில் அமர்த்த உறுதியேற்போம்.

Tags : Corona ,state ,Srinivasan ,Nandiyambakkam , Corona, social activist
× RELATED வீட்டு வாசலில் உறங்கியவர்கள் மீது...